![The film crew announced the release update of Arulnithi movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/RZk0G7h1pYGBSjcB64WR4DI5N8a-rfeqO1NkjG6lBMo/1652954729/sites/default/files/inline-images/Untitled-5_12.jpg)
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதியும் ஒருவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து 'டைரி', 'டி ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் 'தேஜாவு' படத்தில் நடித்துமுடித்துள்ளார். மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வைட் கார்பெட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'பிஜி மீடியா ஒர்க்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ரிலீஸ் மற்றும் வெளியீட்டு உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு டிஜிட்டல் மற்றும் வெளியீட்டு உரிமையை 'ஏபி இன்டர்நேஷனல்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வித்தியாசமான க்ரைம் தில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.