மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர்தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் இயக்குநர் சணல் குமார் கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நடிகை மஞ்சு வாரியர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் பிடியில் இருக்கிறார். அவர்களால்உயிருக்குஆபத்து இருக்கிறது. இது குறித்தசெய்தியைநான் சமூக வலைதளத்தில் பதிவிட்டு4 நாட்கள் ஆகிறது. இருப்பினும் இதில் மஞ்சு வாரியரோஅல்லது அவருக்கு தொடர்பு உடையவர்கள்யாரும்பதிலளிக்கவில்லை. மஞ்சு வாரியரின் மவுனம் எனது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இது குறித்து "உமென்ஸ் இன் சினிமா கலெக்டிவ்" (wcc) என்ற அமைப்பிற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தேன். அவர்களும் இவ்விஷயத்தில் மௌனம் காத்து வருகின்றனர். மிக தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாக்கவிரும்புகின்றனர். இவ்விவகாரத்தில் கேரள ஊடகம் கண்டுகொள்ளாதது போல் நடிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேசிய அளவில் பிரபலமான ஒரு நடிகையின் வழக்கைமற்றும் சுதந்திரம் தொடர்பான இந்த பிரச்சனையைத்தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின்இந்த பதிவுமலையாள திரையுலகினரையும்தாண்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.