Skip to main content

'வியப்பு குறையா நிமிடங்கள், கமல் பகிர்ந்த விஷயம்' - இயக்குநர் ரவிக்குமார் நெகிழ்ச்சி பதிவு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

director ravikumar meet kamalhaasan at 'vikram' success meet function

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடியும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேலாக வசூலித்து வருகிறது. இதனிடையே 'விக்ரம்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் வியந்து பார்த்த ஆளுமை. அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்து வைத்ததும், டைம் டிராவல்  பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம். நன்றி லோகேஷ்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

 

ரவிக்குமார், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.   

 

 

 

சார்ந்த செய்திகள்