நடிகர் கலையரசன், ஹரிஷ் உள்ளிடடோரை வைத்து டார்லிங் 2 என்ற படத்தை சதீஷ் சந்திரசேகர்ன் என்பவர் இயக்கினார். இவர் சென்னை அண்ணா சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இருக்கும் பாருக்கு தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அவர், மதுபோதையில் அந்த நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ஓட்டலில் மதுபோதையில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த ஓட்டலில் இரவு 2 மணிக்கு மேல் பார் இயங்கக் கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.