Skip to main content

ஸ்ரீதேவி மகளுடன் நடிக்கும் விக்ரம் மகன்..?

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
dhruv

 

 

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை பாலா இயக்கினார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் வர்மா படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் துருவ் நடிப்பில் படம் உருவாகி ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட இயக்குனர் பாலா 'படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ்வுடைய எதிர்காலம் கருதி மேற்கொண்டு பேச விரும்பவில்லை' என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தை வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்படத்தின் நாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Hospital explanation about actor Vikram's health!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சியான் விக்ரமிற்கு லேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.


 

Next Story

செய்யாததை செய்த பாலா... வர்மா விளைவு யாரை பாதிக்கும்!!!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020
bala vikram

 

 

பாலா இயக்கத்தில், த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா நேற்று ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு பக்கம், நல்லவேளை இந்த படத்தை த்ருவின் அறிமுக படமாக ரிலீஸ் செய்யப்படவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம், ஆதித்ய வர்மாவுக்கு, வர்மா எவ்வளவோ மேல் என்று சொல்கின்றனர். ஆனால், 2கே கிட்ஸ் மத்தியில் மீம் டெம்பிளேட்டுக்கான படமாகதான் இது பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வர்மா திரைப்படம் விக்ரமிற்காக அதுவரை செய்யாததை பாலா செய்ததால் உருவானது. ஆம், பாலா இதுவரை ரீமேக் படங்கள் எதுவும் இயக்கதில்லை. அவர் படப்புகள் அனைத்துமே மண் சார்ந்து, விளிம்பு நிலை மக்கள் சார்ந்து அமைந்த கதைகள். எனவே பாலா இந்த படத்தை இயக்கும் செய்தி வெளியானபோது ஆச்சரியத்துடனே பார்க்கப்பட்டது. 

 

தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'சேது' திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் பாலாவையே தன் மகனது முதல் படத்தையும் உருவாக்க கேட்டுக்கொண்டார் விக்ரம். பொதுவாக பாலா படங்கள் அதிக நாட்கள் தயாரிப்பில் இருக்கும். 'அவன் இவன்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், தன் நிலையை சரி செய்ய 'நாச்சியார்' திரைப்படத்தை குறுகிய காலத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வெற்றியை பெற்றார் பாலா. 'நாச்சியார்' வெளியான பின்  திரைப்பட தயாரிப்பளர்களின் ஸ்ட்ரைக்கால் அடுத்து புதிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் வசூலை அள்ளியது நாச்சியார். 'கலகலப்பு 2' படமும் ஸ்ட்ரைக்கால் லாபம் பார்த்த இன்னொரு படம். 

 

'நாச்சியார்'க்கு பிறகு 'வர்மா' படத்தை இயக்கினார் பாலா. இதுவரை ரீமேக் படங்களை எடுக்காத பாலா, தன் நண்பர் விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார். அறிவிப்பு வெளிவந்த பொழுது சினிமா ரசிகர்கள் இதுகுறித்து ஆச்சரியப்பட்டனர். பாலாவின் ஸ்டைலுக்கு சற்றும் சம்மந்தமில்லாத படத்தை எப்படி எடுப்பார் என்ற கேள்வியும் இருந்தது. அந்த கேள்வி நியாயமானதே என்பதை ஓடிடி வெளியாகியிருக்கும் வர்மா நிரூபித்துள்ளது.