
'கர்ணன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் 'தி க்ரே மேன்' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின்படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு, அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தனுஷ், மார்ச் மத்தியில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இதற்கிடையே படப்பிடிப்புக்கு நடுவே ஓய்வு நேரத்தில் சக நடிகர்களுடனும், குடும்பத்தினருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் 'பேட்ட' படத்தில் இடம்பெற்ற 'இளமைத் திரும்புதே' என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியை அழகாக ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காதலுக்கு
அர்த்தம்..
இளைமை தான்
போலிருக்கிறது..♥️♥️? @dhanushkraja@ash_r_dhanush@anirudhofficial@karthiksubbaraj
— Subramaniam Shiva (@DirectorS_Shiva) May 3, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)