செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'நானே வருவேன்'. 'வி கிரியேஷன்' சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு தான் டப்பிங் செய்வது போல் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.