/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1460.jpg)
செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.படம் வெளியாக இன்னும் 2 வாரங்களேஇருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர்எப்போது வெளியாகும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் படக்குழு“நீங்கள் ஆர்டர் செய்தது தயாராகுகிறது,விரைவில் வரும்” என்று ஒரு போஸ்டரைவெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ட்ரைலர் அப்டேட்டா, இல்ல வேறஏதும் அப்டேட்டா என்று குழம்பி போய் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)