Skip to main content

அருள்நிதிக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

hdhdrhedhr

 

மாறுபட்ட கதைகளைத் தேர்வுசெய்து நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் நடிகர் அருள்நிதியும் ஒருவர். இவர் தற்போது 'தேஜாவு' (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். ‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரிக்கிறார். 

 

அவருடன் இணைந்து பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி முத்தையா இணை தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாள்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகிவருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்துவருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (21.07.2021) அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்