
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட் ஸடார் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.