
அன்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘கான்ட்ராக்டர் நேசமணி'. இப்படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்க, சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (24.09.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது.
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பை, சென்னை, பொள்ளாச்சி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பட பூஜை விழாவில் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.