/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_303.jpg)
பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ‘சூர்யவம்சம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘மகதீரா’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதில் ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மேலும், இவர் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து தற்போதுதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)