Skip to main content

நடிகை சாந்தினிக்கு திடீர் திருமணம்..! நடன இயக்குனரை மணக்கிறார் 

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
chandini

 

 

 

சித்து +2 படம் மூலம் தமிழில் அறிமுகி, பின் கட்டப்பாவை காணோம், கவண், வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார் சாந்தினி தமிழரசன். இவர் நடிப்பில் அடுத்ததாக வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, பெட்டிக்கடை ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்து முடிந்தது.மேலும் இதனைதொடர்ந்து வரும் 12ஆம் தேதி திருப்பதியில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். அதனைத்தொடர்ந்து வரும் 16ஆம் தேதி சென்னையில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன் திடீர் திருமணம் குறித்து சாந்தினி பேசியபோது... "நானும், நந்தாவும் ஒன்பது வருடங்களாக காதலித்து வந்தோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்தோம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்"

 

 

சார்ந்த செய்திகள்