Published on 19/02/2020 | Edited on 19/02/2020

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் “பொம்மை” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் Dr.ஜாஸ்மின் சந்தோஷ் Dr.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.