Skip to main content

பிரபல காமெடி நடிகரின் தந்தை கரோனாவால் மரணம்!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

vdvzvd

 

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் பால சரவணன், பின்னர் ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘ஒருநாள் கூத்து’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன், கரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நான் நடிகனாக இருக்க இதுதான் காரணம்" - பால சரவணன்

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

bala saravanan talk about kana kanum kalangal

 

கடந்த 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது.இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

 

இந்நிலையில் இந்த தொடர் மீண்டும் புதிய நட்சத்திரங்களுடன் உருவாகி வருகிறது. இதில் தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பி.டி மாஸ்டராக நடிக்கிறார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார்.

 

பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த  வெப் சீரீஸின் கதை. இந்த வெப் தொடர் வரும் 22 ஆம் தேதி முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது.

 

இதன் முந்தைய தொடரில் நடித்து பிரபலமான நடிகர் பால சரவணன், "கனா காணும் காலங்கள், இந்த பெயரை கேட்டவுடன் உள்ளூர ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. எனக்கு பல கனவை நனவாக்கி தந்தது இந்த தொடர் தான். நான் நடிகனாக இருக்க காரணம் இந்த தொடர் தான். எங்களுக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ அதே போல் இந்த புதிய தொடருக்கும் ஆதரவு தாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"கோர்ட் கூண்டுக்குள் நின்று என் லவ் ஸ்டோரிய அஜித்திடம் சொன்னேன்" - நடிகர் பாலா சரவணன் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Bala Saravanan

 

பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, முனீஷ்காந்த், பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்த 18ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியானது. மொத்தம் 7 தொடர்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தத் தொடரில் கருப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாலா சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பாலா சரவணன், வேதாளம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...   

 

"அஜித் சாருடன் நடித்த அனுபவம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அவர் மிகவும் எளிமையான மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நேரில் பார்த்தபோது கேள்விப்பட்டதைவிட ரொம்பவும் எளிமையாக இருந்தார். செட்டில் உள்ள பெரிய நடிகர்கள், வளர்ந்துவரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையுமே ஒரே மாதிரியாக நடத்துவார். வேதாளம் படத்தில் அந்த கோர்ட் சீன் எடுத்தபோது, சார் உங்ககிட்ட நான் பேசணும் சார், வந்ததிலிருந்தே ரொம்பவும் பரபரப்பாகவே இருக்கீங்க என்றேன். அஜித் சார் உடனே, என்ன சரவணன்... வாங்க பேசுவோம்... இதுல என்ன இருக்கு என்று அந்த கோர்ட் கூண்டுக்குள் நின்றே 20 நிமிடங்கள் என்னிடம் பேசினார். என் வாழ்க்கையில் அது மறக்கமுடியாத தருணம். 

 

அஜித் சார் பற்றி எல்லோருமே ஏன் ஒரே விஷயத்தைக் கூறுகிறார்கள் என்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான அன்பு அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த 20 நிமிடங்களில் என்னுடைய லவ் ஸ்டோரி பற்றியும் அவரிடம் சொன்னேன். கல்யாணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் முதலில் ரெஜிஸ்டர் மேரேஜ்தான் செய்தேன். பிறகு, இரு வீட்டார் சம்மதத்தோடு பெரிய கல்யாணம் நடத்தினோம். இன்றைக்கு இரு வீட்டாருமே சந்தோஷமாக உள்ளோம். இந்த விஷயங்களையெல்லாம் அவரிடம் கூறியபோது, இப்ப மாமனார் வீட்டில் நல்ல கவனிப்பா என்று சிரித்துக்கொண்டே கேட்டார். இப்ப நல்லா கவனிச்சுக்குறாங்க என்று நான் கூறியதும், அன்ப கொடுக்குறதுல நம்ம ஊர் ஆளுக எப்போதும் சூப்பருங்க என்று அஜித் சார் சொன்னார். நம்முடைய கதையை பொறுமையாக கேட்டு அதற்கு சுவாரசியமாக அஜித் சார் பதில் சொல்கிறார் என்பதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பனை". இவ்வாறு பாலா சரவணன் தெரிவித்தார்.