Skip to main content

'அவதார் 2' வில் டைட்டானிக் நடிகை ரோஸ்; வெளியான ஃபர்ஸ்ட் லுக்

 

Avatar 2 Kate Winslet as Na'vi warrior first look out now

 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237 மில்லியன் டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847 பில்லியன் டாலர் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

 

இப்படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  பெயரில் பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் அவதார் 2 படத்தில் நடித்துள்ள டைட்டானிக் பட நாயகி கேட் வின்ஸ்லெட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும்  இப்படத்தில் கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த டைட்டானிக் படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட் நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரமாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்