
இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சினம்'. இது நடிகர் அருண் விஜய்யின் 30வது படமாகும். போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது.

மேலும், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் யோசனையில் 'சினம்' படக்குழு இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து 'சினம்' திரைப்படம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று சமீபத்தில் அருண் விஜய் தெரிவித்தார். இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தற்போது அருண் விஜய் அறிவித்துள்ளார்.