vdgds

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்தினர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் உரிமத்தைப் பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது.

Advertisment

'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்த் சமீபத்தில் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானாவாக பிரஷாந்த் நடிக்கிறார். முதலில் இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கப்போவதாக சொல்லப்பட்டது.இதையடுத்து கௌதம் மேனன் இதிலிருந்து விலகிக்கொள்ள, இயக்குனர் மோகன் ராஜா ரீமேக் செய்ய பிரஷாந்த் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

Advertisment

இதையடுத்து மீண்டும் இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் இப்படத்தை நடிகர் பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (10.03.2021) பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பில் பிரஷாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.