Skip to main content

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
amsavardhan

 

 

'பீட்ரு' படத்தில் கதாநாயகராக நடிப்பதோடு, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கும் மறைந்த "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரனின் கலையுலக வாரிசு அம்சவர்தன் காஷ்மீர் - புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை ( சி ஆர் பி எப்) வீரர்கள் இருவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி செய்யதுள்ளார். அம்சவர்தன், முதற்கட்டமாக நேற்று, தூத்துக்குடி சவலாப்பேரி பகுதியை சேர்ந்த, மறைந்த மத்திய ரிசர்வ் படை வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை தனது சொந்த வங்கி கணக்கில் இருந்து நேரில் சென்று  வழங்கி ஆறுதல் கூறியுள்ளார். இன்று அரியலூர்  மாவட்டம் கார்குடியைச் சார்ந்த இந்திய அதிவிரைவு காவல் படை ( சி ஆர் பி எப்) வீரர் சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடமும் நேரில் சென்று  தன் சார்பில் , இரண்டு லட்சத்திற்கான காசோலையை வழங்கி, அந்த வீரரின் குடும்பத்தினருக்கும் ஆறுதலும் கூற உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரிசு நடிகரின் மனைவி கரோனாவால் மரணம்!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

nfdnsdfhndsf

 

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் நடிகர் ஹம்சவர்தனின் மனைவி சாந்தி ஹம்சவர்தன், கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து அவருக்கு சில நாட்கள் கழித்து கரோனா நெகட்டிவ் என வந்தது. இருந்தும் அவருக்குத் தொடர்ந்து மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சாந்தி நேற்று (21.06.2021) மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 42. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சாந்தியின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.