பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சிதாபோ’. மேலும் இந்தப் படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தான் நடிக்கும் வயதான தோற்றம் குறித்து பதிவிட்டு, கூடவே ஷூட்டிங் தளத்தில் தனக்கு டச் அப் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில்...
''கண் புருவங்களுக்கு இடையில் உள்ள இடத்தின் பெயர் என்ன..? உங்களுக்குத் தெரியுமா..?
இது 'க்ளபெல்லா' என்று அழைக்கப்படுகிறது. கிபோசிபோவின் (குலாபோ சிதாபோ) படப்பிடிப்பில் டச் அப் செய்தபோது'' எனக் கூறியுள்ளார்.