/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EpREw5zUUAIBUls.jpg)
2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சார்லீ'. துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும்போட்டி நிலவியது. இறுதியில், பிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் இவ்வுரிமையைக் கைப்பற்றியது.
தமிழில் 'மாறா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, திலீப் குமார் இயக்கினார். ஜிப்ரான் இசையமைத்தார். கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட,தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி, அமேசான் ப்ரைம் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த அக்டோபர் மாதமே அமேசான் நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து, நாளை மறுநாள் இப்படம் வெளியாக இருந்தநிலையில், இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'மாறா' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)