![rust movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/vDyD203U4Xd7evzzX19zJbgoHznUd3xg4GL0fSHEhkQ/1634881755/sites/default/files/inline-images/10_56.jpg)
ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகிவரும் ‘ரஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்றுவருகிறது. அதில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் சண்டைக்காட்சி ஒன்றைப் படக்குழுவினர் நேற்று (21.10.2021) படமாக்கியுள்ளனர். அப்போது, அலெக் பால்ட்வின் கையில் இருந்த படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கியிலிருந்து தவறுதலாக குண்டு பாய்ந்ததில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மற்றும் இயக்குநர் ஜோயல் சோசா காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் மீட்ட படக்குழுவினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ஜோயல் சோசாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், ‘ரஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸின் மறைவிற்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.