Skip to main content

'அது ஒரு சினிமா படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்' - கவர்ச்சி படங்கள் குறித்து அக்‌ஷராஹாசன் விளக்கம்

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
akshrahassan

 

'விவேகம்' படத்தில் நடித்த அக்‌ஷராஹாசனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் கசிந்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன்...

 

 

 

“இது ஒரு சினிமா படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள். வாய்ப்புகளை பொறுத்து இதுபோல புகைப்படங்கள் வரத்தான் செய்யும். இது தொழில் ரீதியான விஷயம். இதில் ஏன் இவ்வளவு விமர்சனங்கள்" என்றார். மேலும் தனது அனுமதியில்லாமல் அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக மும்பை காவல் துறையை தான் அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் 'மீடூ' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்பையில் சொகுசு வீடு வாங்கிய கமலின் மகள்

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Akshara Haasan buys luxury apartment in mumbai

 

அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஷமிதாப்’ படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன். தமிழில் அஜித் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'கடாரம் கொண்டான்', 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியின் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. 

 

இந்த நிலையில், அக்‌ஷரா ஹாசன் மும்பையில் ஒரு சொகுசு வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கர் பகுதியில் ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் 2,245 சதுர அளவில் ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீடு மொத்தம் 15.27 கோடி ரூபாய் எனச் சொல்லப்படும் நிலையில் 13வது தளத்தில் அவர் வீடு அமைந்துள்ளதாம்.  

 

 

Next Story

விஜய் ஆண்டனி படத்தின் டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

Film crew releases teaser update of Vijay Antony movie

 

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் வெளியானது. தொடர்ந்து 'கொலை', 'மலை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நவீன் இயக்கத்தில் 'அக்னிக் சிறகுகள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் விஜய் மற்றும் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அம்மா க்ரியேஷன்' சார்பாக டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில் 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை (27.05.2022) வெளியாகும் என இயக்குநர் நவீன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் 'ஜ்வாலா' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.