கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த படம் சமிதாப். இப்படத்தில் நடிகையாக நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து இவர் நடித்த இரண்டாவது படம் விவேகம். என்னதான் இவர் பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வெளியுலகில் பலருக்கு பரிச்சயமானவர் இல்லை. எந்த சர்ச்சையிலும் சிக்காத நபர் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்டவராக இருந்த இவருக்கு தற்போது ஒரு சர்ச்சை வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் அக்‌ஷரா ஹாசன், தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்ட செல்ஃபீக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருப்பது போன்று இருக்கின்றது. இது போன்ற புகைப்படம் வெளியானது மூலம் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை.