Skip to main content

அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த முன்னணி நடிகை

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

ak 61 movie manju warrier confirmed starring pairs ajith

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்  சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு  போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. சமீபத்திய பேட்டி இதனை உறுதி செய்த மஞ்சு வாரியர் இது குறித்த அறிவிப்பு சர்ப்ரைஸாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இவர் தமிழில் வெற்றிமாறன் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். விரைவில் ’ஏகே 61’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.