ajith birthday wishes to her fan audio goes viral

Advertisment

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார், அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகருடனான தொலைபேசி உரையாடலையும், ரசிகருக்கான வாழ்த்து கடிதத்தில் அஜித் கையொப்பமிட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ரசிகருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கூறிய அஜித், ”சந்தோசமா இருங்க, ஆரோக்கியமா இருங்க... நேரில் மீட் பண்ணுவோம்” என்று கூறியுள்ளார். அக்டோபர் மாதம் பிறந்தநாள் கொண்டாடவுள்ள ரசிகருக்கு அஜித் வாழ்த்து சொல்லிய கடிதத்தையும், அவருடன் உரையாற்றியதையும் இணைத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.