அஜித்குமார் சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேசிங், பைலட், போட்டோகிராஃபி, சிறைய வகை விமானங்களை தயாரிப்பது, ஷூட்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்தின் பல படங்களில் இடம்பெற்றுள்ள பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் இல்லாமல் இவரே செய்வதுதான். இதனால் அஜித் ரசிகர்களுக்கு படத்தில் ஒரு காட்சியாவது அஜித் பைக் ஸ்டண்ட் செய்ய மாட்டாரா என்று எதிர்பார்ப்பார்கள். இவ்வளவு ஏன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்ததாலயே பைக் ஸ்டண்ட் சீன் வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தில் அவர் பைக் ரேசர் என்றுகூட ஒரு பேச்சு இருக்கிறது.

இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியனான அலிசா அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அதில் 5 வருடங்களுக்கு முன் அஜித் என்னுடைய சூப்பர் பைக்கை ஓட்டி, என்னை வாழ்த்தினார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் இடம்பெற்றுள்ள வீடியோவில், “ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணுங்க. பாதுகாப்பு அவசியம்” என்று கூறியுள்ளார்.