/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/120_18.jpg)
‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் 40வது படமாக இப்படம் உருவாகவுள்ளது.
சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் உட்பட படம் குறித்த முழுமையான விவரங்கள் படக்குழு தரப்பிலிருந்து அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)