
அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிக்கொண்டிருக்கும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் நாயகர்கள் 4 பேரும் சகோதரர்களாக நடிப்பதாகவும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு மற்றும் கழிவு, அதனால் ஏற்படும் பிரச்சனை பற்றி அலசும் படமாக இந்த படம் உருவாகி வருகிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முன்னதாக அரவிந்த்சாமி, சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதி ராவ் ஹைதரியும் சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.