2008-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. மலையாள நடிகையான இவர் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் வெளியான 'விசித்திரன்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழில் 'பிசாசு 2', 'அம்மாயி' போன்ற படங்களில் நடித்துமுடித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பூர்ணா, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது குறித்தான அவரது ட்விட்டர் பதிவில், "குடும்பத்தின் ஆசீர்வாதத்தோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்று முடிந்துள்ளது.
With the blessings of family stepping to my next part of life❤️💍 and now it’s official ❤️ pic.twitter.com/v7Qo04t3Ws
— Purnaa (@shamna_kkasim) June 1, 2022