பிரபல மலையாள நடிகையான அனு சித்ரா, 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியவர். கேரளா, தமிழகம் என இரு மாநிலங்களிலும் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு ரம்ஜான் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் அதில் பதிவிட்டிருந்த புகைப்படத்தில், இஸ்லாமியப் பெண்கள் அணியும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்திருந்தார். அவரது இந்த பதிவிற்குக் கீழே அவரது ரசிகர்கள் பலரும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துவந்த சூழலில், அவருடைய ரசிகர் ஒருவர், நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா? எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அனு சித்ரா, "நான் மனிதனாக மாறிவிட்டேன்" எனக் கூறினார். நடிகை அனு சித்ராவின் இந்தப் பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது அந்த பதிலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.