/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/113_11.jpg)
1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், ‘மைதிலி என்னை காதலி’, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘வேலைக்காரன்’, ‘வேதம் புதிது’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 1991இல் வெளியான ‘கற்பூர முல்லை’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில்30 வருடங்களுக்குப் பிறகு, தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘கணம்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க அமலா தயாராகிவருகிறார். இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015இல் வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த ஷர்வானந்த், 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)