உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபான கடைகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கஷ்டப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவி செய்து வந்தார். வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்ததுக்கொண்டார். சமீபத்தில் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக தெலுங்கானா அரசாங்கத்திடம் உதவி கேட்டிருந்தார். தற்போது அதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Thank u @KTRTRS @TelanganaDGP for the safe passage ..44 days of sheltering them n sharing my farm ..I’m gonna miss them... learnt a lot from their stories of life n love ..im proud as a fellow citizen that I didn’t let them down .and I instilled hope n celebrated sharing .. bliss pic.twitter.com/GmFF5NdwjI
— Prakash Raj (@prakashraaj) May 6, 2020
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், "பாதுகாப்பான பயணத்துக்கு நன்றி அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் தெலங்கானா காவல்துறை. 44 நாட்கள் என்னுடைய பண்ணையைப் பகிர்ந்து அவர்களுக்கு இடமளித்தேன். நான் அவர்களை மிஸ் செய்வேன். அவர்களின் கதைகளிலிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன். நான் அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்பதை நினைத்து ஒரு சக குடிமகனாகப் பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கொண்டாடினேன்.. மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.