vdgds

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

Advertisment

அந்த வகையில் நடிகர் பிரபு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... "அருமை பெரியப்பா டாக்டர் கலைஞர் வழியில் நின்று கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள். அப்பாவின் அடிச்சுவற்றில்அயராது மக்கள் பணியாற்றி நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன்முதலாக முதல்வர் பதவியில் அமர்கின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பும், வாழ்த்துகளும். அன்புச் சகோதரன் பிரபு" என கூறியுள்ளார்.