
இந்தியாவில் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட் ஆகியோருக்கு கரோனாதொற்று உறுதியானது. இந்தநிலையில்பிரபல இந்தி நடிகரும், ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமாருக்கு நேற்று (05.04.2021) கரோனா உறுதியானது. இதனையடுத்துஅவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், தான் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின்அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், விரைவில் வீடு திரும்புவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)