Abhimanyu Singh

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பின், சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்திவருகிறது. படத்தைத் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரும் முடிவில் உள்ள படக்குழு, இறுதிக்கட்டப்பணிகளை அதற்கேற்ப திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், அண்ணாத்த படக்குழுவினரோடு பிரபல இந்தி நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், 'வேலாயுதம்' மற்றும் 'தலைவா' படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்திக்கு வில்லனாகவும் நடித்திருந்தார். 'அண்ணாத்த' படத்தில் அபிமன்யு சிங் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment