Skip to main content

முதல் உலக கோப்பையை வென்ற இந்தியாவின் கதை; 83 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

83 movie release date announced

 

1983 கிரிக்கெட்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி  உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாகவும்,   நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாகவும்  நடித்துள்ளனர். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது 

 

ad

 

இந்நிலையில்  படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.. அதன்படி, டிசம்பர் 1 ஆம் தேதி 83 படத்தின் ட்ரைலரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 24 ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
ranveer sing in thalaivar 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து  ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.  

Next Story

இளம் அமைச்சர்; உதயநிதியின் துறை குறித்து நடிகர் ஜீவா

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

Sports Department of Minister Udayanidhi; Jiva's feedback

 

நடிகர் ஜீவா திருவண்ணாமலையில் நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டித் தொடரை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் இரண்டும் இணைந்து நடத்துகின்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு விளையாட்டுத்துறை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மிகக் குறைவாகத்தான் ஆட்கள் சேருவார்கள். நான் நினைக்கிறேன், இளம் அமைச்சர் அத்துறையை ஏற்று நடத்துகிறபோது உண்மையாகவே சிறப்பாக உள்ளது. இணைய உலகம் வந்ததில் இருந்து இங்கிருக்கும் அனைத்தும் சிறியதாக மாறிவிட்டது. 

 

திறமையானவர்களை கண்டறிவது மிக எளிதான விஷயமாக உள்ளது. சிலர் விளையாட்டு நிகழ்வுகளையும் போட்டிகளையும் ஏற்று நடத்துகிறார்கள். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும். வரும் ஒலிம்பிக், ஏசியன் போட்டிகளிலும் தமிழகத்தில் இருந்து செல்லும் வீரர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும். நிச்சயமாக இந்தியா உலக விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.

 

விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடக்கூடாது. தற்போதைய இளைஞர்களுக்கு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. அவர்களே அவர்களுக்கான ஆலோசனைகளை கொடுத்துக் கொள்கிறார்கள். நேர்மறையான சிந்தனையில் அவர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பெரிய அளவில் உலகில் காட்ட வேண்டும்.” என்றார்.