Skip to main content

விநாயகர் சதுர்த்தியை குறி வைத்த ரஜினியின் 2.O படம் 

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
rajini

 

 

 

ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் '2.O'. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு  வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கே இப்படம் வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகளின் தாமதத்தால் மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. இதையடுத்து கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், வரும் நவம்பர் மாதம் 29ஆம் தேதி  '2.O' படம் வெளியாகயிருப்பதாகவும் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடுவதாக இயக்குனர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0