Published on 28/12/2021 | Edited on 28/12/2021









இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ், மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வலிமை படத்தின் புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்டைலான லுக்கில் மாஸாக அஜித் தோன்றியுள்ள இப்புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.