Published on 18/11/2021 | Edited on 18/11/2021







அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.