Published on 10/12/2021 | Edited on 10/12/2021




பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிகர் விக்கி கௌசலும் காதலித்தது வந்த நிலையில் இருவருக்கும் நேற்று (9.12.2021) ராஜஸ்தானில் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாகவும் பலத்த பாதுகாப்புடனும் நடைபெற்ற இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் 120 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, "உங்களின் அன்பு மற்றும் ஆசியுடன் இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.