முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று (15.10.2021) நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு மரம் நடுதல் உட்பட பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலரும் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஆர்யா இன்று செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார்.

Advertisment

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6e0a7984-3485-4d51-8bf1-1a5a3ae47d35" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_99.jpg" />

மரக்கன்று நட்ட பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்யா, "அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளன்று நான் மரம் நடுவேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஒவ்வொரு பிறந்தநாளன்றும் மரக்கன்று நட என் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" எனக் கூறினார். நடிகர் ஆர்யா மரக்கன்று நட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Advertisment