அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். பலர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று இவ்வளவு தைரியமாக ஆடையின்றி நடித்ததற்கு பாராட்டினார்கள். அதேசமயம் பலர் இந்த படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்ததற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்கள். இப்படி சர்ச்சையில் சிக்கிதான் அந்த படம் வெளியாகி வெற்றியடைந்தது.

Advertisment

ஆடை படத்தை தொடர்ந்து நடிகை அமலா பால் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கியுள்ளார். உலகின் முதன்மையான டிஜிட்டல் மீடியமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள ஒரு புதிய படத்திற்காக அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் நடிக்கும் பகுதிகளை நந்தினி ரெட்டி இயக்கவிருக்கிறார். படத்திற்கான ஃபோட்டோ ஷூட் முடிந்து புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment