Skip to main content

"முழுநீள கருப்பு அங்கியில் அந்த உதடுகள் சிகரெட் சுமந்தபடியே சிரித்தது.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #10

Published on 13/09/2020 | Edited on 14/09/2020
kl

 

எச்சரித்தேன் உன்னை தினம் தினம் எச்சிரித்தேன் விலகாதே விலகினால் விடியலைக் காண மாட்டாய். கைக்கடக்க குறிப்பேட்டு புத்தகத்தில் ஒவ்வொரு வரிகளாய் எழுதி எழுதி அதை கிழித்துக் குப்பையாக்கிக் கொண்டு இருந்தாள் ஆயிஷா. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகுது இன்னும் தயாராகலையா? குரல் கேட்டு திரும்பியவள் அதுக்குத்தான் ஸார் ஒரு பிரமோ ரெடி பண்ணியிருக்கேன். கேக்குறீங்களா? வணக்கம் நேயர்களே திக் திக் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம் ஆரம்பித்த இரண்டாவது எபிசோட்லேயே இத்தனை பரபரப்பை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. மேடம் இப்பவே லைவ் காலர்ஸ் வர ஆரம்பிச்சாட்டாங்க எல்லா நம்பரையும் ரெக்கார்ட் பண்ணுங்க ரவி. நிகழ்ச்சி ஆரம்பித்ததும் நாமே கூப்பிடறோன்னு சொல்லுங்க. 

 

ஆயிஷா இந்த நிகழ்ச்சிக்காக விளம்பரதாரர்கள் நிறைய இன்வஸ்ட் பண்ணியிருக்காங்க லைவ் ரிளேயில் எந்த சிக்கலும் வந்திடக்கூடாது போன வாரம் மாதிரி ஸ்மூத்தா கொண்டு போங்க. ஒ.கே ஸார்... இலேசான முகப்பூச்சோடு தயாரான ஆயிஷா இயற்கை ஊந்துதல் நெட்டித்தள்ள ஒரு நிமிடம் வந்திடுறேன் ரவி. நீங்க இன்ட்ரோ போட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு கீழ்த்தளத்திற்கு நடந்தவளை எதிர்பட்ட இரண்டு லைட் மேன்களை சிரித்து வைக்க பதிலுக்கு புன்னகத்தபடி திடுமென்று செலுத்தப்பட்டவளைப் போல அந்த டார்க்ரூமிற்குள் இழுக்கப்பட்டாள்.  திக்...திக் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் பயப்படத் தயாராகுங்கள் நேயர்களே. அமானுஷ்யம், திரில், சஸ்பென்ஸ்ன்னு ஏதாவது ஒரு முறையில் பார்வையாளர்களை பயமுறுத்த வாட்ஸ்அப் வீடியோ அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். 

 

நீங்க அனுப்பின அத்தனை வீடியோக்களும் இப்போ ப்ளே ஆகப்போகுது. பயப்படத் தயாராகுங்க நிகழ்ச்சியின் முடிவில் சென்றவாரம் வென்ற நேயரின் பெயரும் அவரின் வீடியோவும் ஒளிபரப்படும் நான் உங்கள் ஆயிஷா நீங்கள் பார்க்கப்போவது திக்.....திக்.... ரெக்கார்ட் செய்யப்பட்டு ஒளிப்பரப்பி இரண்டு வீடியோக்களுக்கு நடுவில் பிரேக் விட்ட பிறகும் ஆயிஷா ஸ்பாட்டுக்கு வரவில்லை.  நேரம் ஆச்சி காலர்ஸ் எல்லாம் வெயிட்டிங் ஆனா அந்த பொண்ணு ஆயிஷா எங்கே போச்சின்னே தெரியலை சீனியர் கேமிராமேன் கையைப் பிசைய அடுத்த நிகழ்ச்சிக்கு தயாராக வந்த ராகவி உள்ளே இழுக்கப்பட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினாள். 
சார் சொல்லுங்க ரவி இப்போ என்ன பிரச்சனை நிபந்தனைகளின் படி நாமதான் கால் பண்ணணும் ஆனா ஒரு நேரிடிக் கால் வருது அதிலும் லைவ்வா?!  பரவாயில்லை கனெக்ட் பண்ணு. திரை ஒளிபரப்பிய முதல் காட்சியில் பாதி எரிந்து கொண்டிருந்த நிலையில் ஒரு சிகரெட் இரு விரல்களுக்கு இடையில் புகைந்து கொண்டிருந்தது. கரகரப்பான குரலில்...எச்சரித்தேன் உன்னை தினம் தினம் எச்சிரித்தேன் விலகாதே விலகினால் விடியலைக் காண மாட்டாய் என்று.

 

ரகத

 

வணக்கம் யார் நீங்க? இந்த ஷோ பேசுவதற்கான ஷோ இல்லை ஸார் உங்ககிட்ட வீடியோ இருந்தா நீங்க ஒளிபரப்பலாம் ராகவியின் குரலில் வீடியோதானே இதோ....லைவ் ரிலே... முழுநீள கருப்பு அங்கியில் உதடுகள் சிகரெட் சுமந்தபடியே சிரித்தது. வெறித்தனமான முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சிரிப்பு. மொத்த யூனிட்டும் ஒருமுறை பார்வையால் பக்கத்தில் இருந்தவர்களைத் தழுவிக்கொண்டது. கேமிராவின் கோணம் ஒரு சேரை நோக்கிப் போக, கிழிபட்ட உதடுகளில் இருந்து ஒரு கோடாய் ரத்தத்தீற்றல். உடைகள் தாறுமாறாய் கிழிபட்டு போயிருக்க, முகத்திற்கு க்ளோஸப் வெக்கவா? இரண்டு கண்கள் இருந்த இடத்தில் ஒரு பக்கம் பள்ளமாக இருந்தது. அதிலிருந்து உறைந்த ரத்தம் கருப்பு நிறமாய் மாறியிருந்தது. எப்படி என் போன் கேமிரா அழகாக படம் எடுத்திருக்கிறது இல்லையா? இந்த உடலை ரசித்த அளவிற்கு அவள் குரலையோ முகத்தையோ நான் ரசிக்கவில்லை, ஒன்று நமக்கு பிடிக்கவிலலை என்றால் நாம் என்ன செய்வோம்? அழித்துவிடுவோம் இல்லையா?

 

அப்படித்தான் என் இதயத்துடிப்பை அதிகரிக்க வைத்தவள், அதை அடக்க அவளே அடங்க வேண்டும் திக்...திக்...கதாநாயகி அல்லவா? அந்த கதையில் அவள் இல்லாமலா ? அவன் பேச பேச விரல்கள் அவள் உடலில் கூர் ஆயுதத்தால் கோலம் போட்டுக் கொண்டே இருந்தது. அதில் அவளின் உடல் மரண அவஸ்தையில் முனகிக் கொண்டு இருக்க. ஸார் இது நம்ம ஆயிஷா என்ற ரவி கிட்டத்தட்ட கத்தினான்.  என்னது? யூனிட்டில் ஒரு பதட்டம் ஒட்டிக்கொண்டது. கடவுளே? ஆயிஷா எப்படி மாட்டினாள்? யார் அவன்? போலீஸ்க்கு போன் பண்ணுங்க என்று இயக்குநர் கத்திட, சார் அவனுடையது நேரடிக்கால் தான் ஆனா எங்களால நம்பரும் கண்டுபிடிக்க முடியலை டிராக்கும் எடுக்க முடியலை. இப்போ இதை நிறுத்தினா ஆயிஷா பற்றி தெரியாமலேயே போயிடும் ஸார். தேடினால் கிடைக்கமாட்டேன் ஆறடிக் குழிக்குள் புதைந்துப் போனாலும் தேடிக் கண்டுபிடிப்பேன். அவன் குரல் கர்ணக் கொடூரமாய்! நம்ப மறுத்தவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு கரண்டி சிமெண்ட் கலவையை எடுத்து அவளின் வாய் திறந்து அதில் அடைத்தான். 

 

நிதானமாய் மற்றொரு கண்ணிலும் கோடு போட்டு அதையும் தோண்டி எடுத்தான். எச்சரித்தேன் எச்சரித்தேன் ....என்று மீண்டும் குரலில் வார்த்தைகள். வலியில் அவள் உடல் தூக்கிப் போட்டது. கவரில் இருந்து எதையோ எடுத்து அவளின் உடல் மீது கவிழ்த்தான் திரவத்தை தாண்டி சில புழுக்கள் நெளிந்து அவளின் உடலை ருசித்தது. ஸார் இது நம்ம பேஸ்மெண்ட் தளம் சார். லைவ்வை நிறுத்திவிட்டு அனைவரும் பேஸ்மெண்ட் நோக்கி நகர்ந்தார்கள். ஆனால் அங்கே அவன் இல்லை மாறாக அவள் மட்டும் சேரில் தனித்திருந்தாள். அவள் உடல் முழுக்க பிசுபிசுவென்று பிரவுன் நிறத்தில் ஏதுவோ வழிந்து கொண்டிருக்க சுற்றிலும் பூச்சிகள் அவளின் சதையை சுவைத்துக் கொண்டு இருந்தது. ஆயிஷா முழுவதுமாக செத்திருந்தாள்.  மீண்டும் வருவேன் என்று நினைக்காதே தேடினேன் கிடைத்து விட்டாய் தேடக்கூடாத இடத்தில் நான் தேடினால் நீயும் சொர்க்கம் காண்பாய் என்று எழுதிவைத்து இருந்தான் கிறுக்கலாய் கோணல் மாணலான கையெழுத்தில்....திக் திக்....தொடரும்.

 

முந்தைய பகுதி:

 

என் டார்கெட் அவளது விழிகள்! லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #9
 

 

சார்ந்த செய்திகள்