Skip to main content

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

sachin tendulkar

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் கரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த 27ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர், "உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனை அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரும் கவனமாக, பாதுகாப்பாக இருங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்திய ரசிகர்களுக்கும், அவரது சக வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.