Published on 09/11/2021 | Edited on 09/11/2021

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நடந்து இருபத்து ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்தநிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு நடையை கட்டியதால், நேற்றோடு மூன்று பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து விடைபெற்ற ரவி சாஸ்திரிக்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தங்களது பேட்டினை பரிசாக அளித்துள்ளனர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டினை ரவி சாஸ்திரி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.