india vs south africa

Advertisment

இந்தியா - தென்னாப்ரிக்காஇடையே மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்றுள்ளன. இந்தியா, இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையில், மூன்றாவது போட்டியில்வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தச்சூழலில்இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக கடந்த டெஸ்ட் போட்டியின்போதுகாயமடைந்த சிராஜூக்குபதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்படவுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கடந்த டெஸ்ட் போட்டியில் முதுகு பிடிப்பின்காரணமாக விளையாடாதவிராட் கோலியும் அணிக்குத் திரும்பவுள்ளதாகக் கூறும் தகவல்கள், விராட் கோலி விளையாடுவதால் ஹனுமா விஹாரி ஆடும் அணியிலிருந்து நீக்கப்படுவார் எனவும்தெரிவித்துள்ளன.