
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (12/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 91, தீபக் ஹூடா 64, கெயில் 40 ரன்களைச் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்ஜூ சாம்சன் 119, பட்லர் 25 ரன்களை எடுத்தார்.