Published on 19/09/2021 | Edited on 20/09/2021

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று (20/09/2021) துபாயில் மீண்டும் தொடங்கியது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 88, ஜடேஜா 26. பிராவோ 23 ரன்களை எடுத்தனர்.