Skip to main content

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

 India’s squad for T20Is against New Zealand


நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ. அதன்படி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல், கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார், ரிஷப் பந்த், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், சாஹல், அஸ்வின் அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

 

Next Story

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Born in New Zealand is New Year People flooded with happiness

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதனையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்” - நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயை 13 ரன்களிலும், ரச்சினையும் 13 ரன்களிலும் முகமது ஷமி வெளியேற்றினார். ஆனால் சிறப்பாக ஆடிய மிட்செல் சதமடித்தார். அடுத்து வந்த சாப்மேனை குல்தீப் அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் ரன் ரேட் அழுத்தத்தால் சிக்சர் அடிக்க முயன்று ஷமி பந்தில் 134 ரன்களில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

இதற்கிடையே இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி குறித்து பேசுகையில், “முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன். அதன் பின்னர் நியூசிலாந்து தரப்பில் 2, 3 என விக்கெட்டுகள் விழுந்ததும் ஆட்டம் நன்றாக சென்றது. கண்டிப்பாக இந்த முறை கப் (உலக கோப்பை) நமக்குத்தான். இந்தப் போட்டியில் வெல்ல 100 சதவீதம் முகமது ஷமிதான் காரணம்” என தெரிவித்தார்.